Posts

Showing posts from June, 2020

பென்னகர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாட புத்தகங்கள்

2020-2021ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய பாட நூல்கள் நேற்று (25.06.2020) இராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரைக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டன. பென்னகர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தேவையான 6 முதல் 10ஆம் வகுப்பு வரைக்கான அனைத்து புத்தகங்களும் பெறப்பட்டது. புத்தகங்களை பெற்று பள்ளிக்கு கொண்டுபோய் பாதுகாப்பாக சேர்க்கும் பணியை உதவி தலைமை ஆசிரியர் (அறிவியல்) திரு.எஸ்.தண்டபாணியும், திரு.எஸ்.வசந்த்ராஜன், ஆய்வக உதவியாளர் திரு.த.தருமலிங்கம் அவர்களும் செய்தனர். இவர்களுடன் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராகிய நானும் சென்றிருந்தேன்.